பிரதமர் மோடி பிறந்த செப்டம்பர் 17ம் தேதிதான் சமூகநீதி நாள் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்..
தமிழக அரசு விநாயகர் சிலையை மக்கள் அனைவரும் வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்றும், பொது வெளியில் வைத்து வழிபட அனுமதி இல்லை என்றும் தெரிவித்தது.. ஆனால் நேற்று தமிழக அரசின் உத்தரவை மீறி தஞ்சாவூர், ஈரோடு உட்பட மாவட்டத்தின் சில பகுதிகளில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைக்க முற்பட்டனர்.. இதனால் போலீசார் சிலையை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்..
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியதாவது, போலீஸே விநாயகர் சிலையை தூக்கிச் செல்வது அராஜகத்தின் உச்சக்கட்டம். இந்து மத உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக போலீசார் நடந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.. மேலும் அவர், மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் 27% இடஒதுக்கீடு வழங்கிய பிரதமர் மோடி பிறந்த செப்டம்பர் 17ம் தேதிதான் சமூகநீதி நாள் என்று கூறினார்..
சில நாட்களுக்கு முன்னதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், செப்-17 ஆம் தேதி பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.. இதற்கு பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், கடவுள் நம்பிக்கையோடு இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் பெரியார் தினமான செப்டம்பர் 17ஆம் தேதி சமூகநீதி நாளாக அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவிப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது..