Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கோபித்துக்கொண்ட மனைவி… கணவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி கோபித்துகொண்டு பேசாமல் இருந்ததால் விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எஸ்.முகையூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு செல்வராணி என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் பெரியசாமி குடிபழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனையடுத்து தினமும் பெரியசாமி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால் செல்வராணி கோபித்துகொண்டு கணவருடன் பேசாமல் இருந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த பெரியசாமி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைபார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பெரியசாமியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமத்திதுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் பெரியசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற வரஞ்சரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |