Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வலியால் அவதிப்பட்ட பெண்… எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்துள்ள பள்ளத்தூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி மாதம்மாள் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு சிகிச்சை எடுத்தும் வயிற்றுவலி சரியாகவில்லை. இதனால் மாதம்மாள் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விரக்தியடைந்த மாதம்மாள் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மாதம்மாளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மாதம்மாள் சகோதரன் அளித்த புகாரின் அடிப்படையில் கம்பைநல்லூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |