Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர்…. வேறு பள்ளிக்கு மாற்றம்….!!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வடுகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை இயற்பியல் பாட ஆசிரியராக இருந்தவர் எடின்பரோ கோமகன்(53). இவர் கடந்த வாரம் இயற்பியல் ஆய்வு கூடத்தில் மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தினார். அப்போது மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியதாக ஆசிரியர் மீது புகார் எழுந்தது. இந்த சம்பவம் பற்றி மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், மாணவிகளை பள்ளிக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார்.

அதன்பிறகு விசாரணை அறிக்கையை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பித்தார். இந்நிலையில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர் எடின்பரோ கோமகன் மங்களபுரம் அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப் படுவதாக முதன்மை கல்வி அலுவலர் பாலு உத்தரவிட்டுள்ளார். மேலும் வாரத்தில் ஏழு நாட்களும் மங்களபுரம் பள்ளியில் பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆபாச படம் காட்டிய ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |