Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இடைத்தேர்தலில் மம்தாவிற்கு எதிராக…. புதிய வேட்பாளரை களமிறக்கிய பாஜக…. யார் தெரியுமா?….!!!!

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அதில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுரேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இருந்தாலும் மம்தா பானர்ஜி முதலமைச்சராக பதவியேற்றதால், 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வாக வேண்டிய கட்டாயம் உருவானது. அதனால் பவானிபூர் எம்எல்ஏ மற்றும் வேளாண் துறை அமைச்சரான சுபன் தீப் சந்தோ பத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து பவானிபூர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கும் வருகின்ற 30 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பவானி பூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட உள்ளார். இதற்கு முன்னதாக அந்த தொகுதியில் இரு முறை போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார். மம்தாவிற்கு எதிராக எந்த வேட்பாளரையும் காங்கிரஸ் கட்சி நிறுத்தவில்லை. இந்நிலையில் எதிர்க்கட்சியான பாஜக பவாணிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பிரியங்கா திப்ரேவாலை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

Categories

Tech |