ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா அருகே இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கி யுடன் கடந்த ஆண்டை இணைக்கப்பட்டது. இருந்தாலும் தற்போது வரை இந்த இரண்டு பழைய வங்கியின் காசோலைப் புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது இந்நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளின் பழைய காசோலைப் புத்தகங்கள் செல்லாது என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய இ-ஓபிசி மற்றும் இ-யுஎன்ஐ காசோலை புத்தகத்தை, பிஎன்பி வங்கிக் கிளையில் புதிய காசோலை புத்தகமாக மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு உதவி அல்லது கூடுதல் தகவல்களுக்கு வங்கியின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-180-2222 ஐ தொடர்பு கொள்ளலாம் என பிஎன்பி வங்கி தெரிவித்துள்ளது.