Categories
உலக செய்திகள்

“மருத்துவ சேவையை நிறுத்திய உலகநாடுகள்!”.. ஆப்கானிஸ்தானில் 90% மருத்துவமனைகள் அடைப்பு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உலக நாடுகளின் மருத்துவ சேவை நிறுத்தப்பட்டதால், 90% மருத்துவமனைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய ஆட்சியை அமைப்பது தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதே சமயத்தில், நாட்டின் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. உலக நாடுகளை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் மருத்துவ சேவைகளை வழங்கும், பிரெஞ்சின் மெடிக்கல் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் குண்டுகள் மற்றும் தோட்டாக்களால் உயிரிழப்பதை விட, சாதாரணமான தடுப்பூசி கூட கிடைக்காமல் உயிரிழப்பார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பின்பு, அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களின் மருத்துவ உதவி அமைப்புகளை அங்கிருந்து வெளியேற்றிக்கொண்டது.

மேலும், ஆப்கானிஸ்தானில் பல மருத்துவர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும்  சரியாக  ஊதியங்கள் வழங்கப்படுவதில்லை. அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்துக்கொண்டு தான் மருத்துவர்கள் மக்களுக்காக பணியாற்றி வந்தனர். ஆனால் அவர்களுக்கு தேவைப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் முறையாக கிடைக்கவில்லை.

இதனால், நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. மேலும் நாட்டில் இருக்கும் 90 சதவீத  மருத்துவமனைகள் அடைக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. எனவே, அவசர சிகிச்சையை கூட பெற முடியாத நிலையில் பல மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானில் பொருளாதாரமும் பாதிப்படைந்திருக்கிறது. எனவே அதிகம் செலவு செய்து மருத்துவ சிகிச்சைப்பெற மக்கள் முன் வருவதில்லை என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |