நடிகர் சூர்யா மீண்டும் இயக்குனர் சுதா கொங்கராவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக உள்ளது. மேலும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் சூர்யா மீண்டும் இயக்குனர் சுதா கொங்கராவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைய இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.