Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பேருந்து-மோட்டார்சைக்கிள் மோதல்…. வாலிபருக்கு நேர்ந்த துயரம்…. திருவாரூரில் சோகம்….!!

பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரித்துவாரமங்கலம் கிராமத்திற்கு தஞ்சையிலிருந்து அம்மாபேட்டை, அவளிவநல்லூர் வழியாக அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்து வழக்கம்போல் அரித்துவாரமங்கலம் கிராமத்திற்கு சென்றுவிட்டு பின் தஞ்சைக்கு சென்றுகொண்டிருந்தது. இதனையடுத்து பேருந்து அவளிவநல்லூர் அருகில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரில் திருபுவனம் மருத்துவ தெருவைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதனால் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த அரித்துவாரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |