அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணிற்கு குடல்வால்வை அகற்றினர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் மீனவர் காலனி பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருக்கின்றார். இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்து நிலையில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது கலைச்செல்விக்கு குடல்வால்வு வீக்கம் இருந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கலைச்செல்வி சிகிச்சைகாக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவர் பாஸ்கர், அறுவை சிகிச்சை மருத்துவர் பிரசன்னா வெங்கடேசன், மயக்க மருந்து டாக்டர் சுகாதர் ஆகியோர் கலைச்செல்வியை பரிசோதனை செய்தனர். அப்போது கலைச்செல்விக்கு அறுவை சிகிச்சை நடத்துவதற்கு மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்பின் கடந்த 4-ஆம் தேதி நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் கலைச்செல்விக்கு குடல்வாழ்வு அகற்றப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து கலைச்செல்வி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இவ்வாறு அறுவை சிகிச்சை மூலம் குடல்வால்வை அகற்றிய அரசு மருத்துவர்களுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.