செம்பருத்தி சீரியலின் முக்கிய நாயகி அச்சீரியலை விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் சில சீரியல்கள் தொடர்ந்து டிஆர்பியிலும் முன்னணி வகித்து வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியல் ஒரு கால கட்டத்தில் ஹிட் சீரியல் ஆக இருந்தது.
ஆனால் அந்த சீரியலின் முக்கிய நாயகன் எப்போது அதிலிருந்து விலகினாரோ அப்போதிலிருந்து இந்த சீரியல் சற்று போர் அடிக்க தொடங்கி விட்டது. இந்நிலையில் செம்பருத்தி சீரியலின் முக்கிய நாயகியான பிரியா ராமனும் செம்பருத்தி சீரியலில் இருந்து விரைவில் விலக இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.