Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆடு, பூனைகளை வேட்டையாடிட்டு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் முயற்சி….!!

கிராமப் பகுதிகளில் சிறுத்தை புகுந்து ஆடு, பூனைகளை வேட்டையாடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஜிலேப்ப நாயக்கனூர் இருக்கின்றது. இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை கிராம மக்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் விவசாய தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை சிறுத்தை வேட்டையாடியது. மேலும் 2 பூனைகளையும் சிறுத்தை வேட்டையாடியதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

இதனையடுத்து பொதுமக்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு செல்லாமல் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்ககோரி பொன்னாலம்மன்செளலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் பொதுமக்கள் கூறியபடி ஆடு, பூனைகளை வேட்டையாடியது சிறுத்தை தான் என்பதை வனத்துறையினர் உறுதி செய்து அந்த கிராமத்தில் 4 இடங்களில் சி.சி.டி.வி. கேமராவை பொருத்தியுள்ளனர். அப்போது வனத்துறையினர் கூறியபோது சிறுத்தை நடமாட்டம் இருந்தால் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி விடும். அதன்பின் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிப்பதற்கு முதற்கட்ட பணியில் ஈடுபட்டிருப்பதாக வனத்துறையினர் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |