புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் டவுன் காவல் துறையினருக்கு அய்யாசாமியின் வீட்டில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு 80 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அய்யாசாமியை கைது செய்ததோடு அவரிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.