பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- தள்ளுபடி, விலைக் குறைப்பு என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கொள்ளை லாபத்தில் பொருட்களை விற்பதாக புகார்கள் வந்துள்ளன. இதில் சில விதிமீறல்களும் நடந்துள்ளதாக அந்த புகார்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுபோன்ற சலுகைகளை வழங்க அவர்களுக்கு அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீது வியாபாரிகளும் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து அமேசான், பிளிப்கார்ட் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ச்சியாக வருகின்றன. இதையடுத்து ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.இந்த நிலையில், கடந்த 15 நாட்களில் மட்டும் மூன்று மில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகம் நடந்துள்ளது. இது அந்நிறுவனத்தின் ஆண்டு விற்பனையில் பாதியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.