Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தின்பண்டங்களை எடுத்துட்டு போகுது…. அட்டுழியம் செய்யும் குரங்கு…. அதிகாரிகளின் முயற்சி….!!

கடைகளில் நுழைந்து தின்பண்டங்கள் மற்றும் பழங்களை தின்று செல்லும் குரங்கை அதிகாரிகள் பிடிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொங்கலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக 3 குரங்குகள் அட்டூழியம் செய்து வருகிறது. இந்த குரங்குகள் காட்டூர் ரோடு கண்டியம்மன்கோவில் பகுதி கடைகளில் நுழைந்து பழங்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச் செல்கிறது. மேலும் அந்த பகுதியில் செல்பவர்களை பயமுறுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வனச்சரக அலுவலர் செந்தில்குமார் உத்தரவின்படி, வனவர் திருநாவுக்கரசு மற்றும் மான் காவலர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குரங்குகள் சுற்றி வரும் பகுதியை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது குரங்குகள் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் சுற்றிதிரிவதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அங்கு அதிகாரிகள் சென்று குரங்குக்கு தின்பண்டங்கள் கொடுத்து அருகில் சென்றனர். அதன்பின் குரங்குகளை அதிகாரிகள் பிடிக்க முயன்றபோது அது தப்பிச் சென்றுவிட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியபோது 2 நாட்களுக்கு குரங்குகளுக்கு தின்பண்டங்கள் கொடுத்து பழகியபின் பிடிக்க முயற்சி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். எனவே விரைவில் குரங்குகள் பிடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Categories

Tech |