விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கலெக்டருக்கு மனு அளித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் கையில் சிலையுடன் நுழைவு வாசலில் நின்று உள்ளனர். இந்நிலையில் வருகின்ற 1௦-ஆம் தேதியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சாதி வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறது. இதனையடுத்து பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனைக் கேட்டு பொதுமக்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதனால் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவை இம்மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் எல்லோரும் சிறப்பாக கொண்டாடும் விதமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும் மற்றும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லவும் அனுமதி அளிக்க வேண்டுமென மாவட்ட கலெக்டரிடம் இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மனுவை வாங்கிக் கொண்ட கலெக்டர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.