தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Categories
இன்று முதல் 5 நாட்களுக்கு…. மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
