ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணம், கணினி ஆபரேட்டர் தற்கொலை ஆகிய வழக்குகளின் பிரிவுகளை மாற்ற பரிசீலனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கனகராஜ் சில நாட்களிலேயே சந்தேகப்படும் விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து கோடநாடு பங்களாவில் கணினி ஆபரேட்டராக இருந்த தினேஷும் தற்கொலை செய்து கொண்டார்.. இந்த 2 சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.. இதற்கிடையே இவ்விருவரது மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கோடநாடு சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணம், கணினி ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை ஆகிய வழக்குகளின் பிரிவுகளை மாற்ற பரிசீலனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.. இருவரது இறப்பிலும் சந்தேகம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் வழக்கின் பிரிவு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது..
தற்போது கோடநாடு வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையானது மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..