இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் இன்று சட்டசபையில் முன்மொழிந்தார்.
இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த திருத்த சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால், இது சட்டமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திற்கு திமுக உள்ளிட்ட பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அதில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய குடியுரிமை திருத்த சட்டம் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் என்று ஸ்டாலின் விமர்சித்தார். இலங்கை தமிழர்களை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. சட்டப்படியான சமத்துவம், சட்டப்படியான பாதுகாப்பை மத்திய அரசு மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.