Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆத்திரமடைந்த கணவன்…. மனைவிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை….!!

குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆண்டவர் கோவில் பகுதியில் சிவப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பூமா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணத்தினால் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து காலை நேரத்தில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் கோபமடைந்த சிவப்பிரகாசம் மதுபோதையில் கட்டையால் பூமாவின் தலையில் பலமாக அடித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த பூமா சம்பவ இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த சிவப்பிரகாசம் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதன்பின் வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்காததால் பின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசிய காரணத்தினால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிவபிரகாசத்தின் வீட்டை திறந்து பார்த்த போது பூமா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் பூமா கொலை செய்யப்பட்டதை அறிந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீட்டின் முன்பாக திரண்டு கதறி அழுதுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பூமா வீட்டின் அருகில் வசிப்பவர்களிடம் கொலை சம்பந்தமாக விசாரணை செய்துள்ளனர். அதற்கு பிறகு பூமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவப்பிரகாசத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |