சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் மேம்பாலத்திற்கு அருகே சாலையோர பூங்கா அமைப்பதற்கான திட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து பலர் பள்ளிகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் சீல் வைத்து மூடப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார். இதையடுத்து பேசிய அவர் தமிழகத்தில் தற்போது வரை மொத்தமாக 3,59,31,677 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 44 சதவீதமும், 15 சதவீதம் பேருக்கு இரண்டம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.