விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய ஜூக்பாக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லாபம். இந்த படம் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் கடைசி படமாகும். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சாய் தன்ஷிகா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7Cs என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் லாபம் படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய ஜூக்பாக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது.