புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஈரடுக்கு மேம்பாலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மேலப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஆலிவர் மற்றும் பிரகாஷ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 73 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.