நடிகர் அர்ஜுன் அடுத்ததாக நடிக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து அசத்தி வருபவர் அர்ஜுன். மேலும் இவர் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் பிரெண்ட்ஷிப், மேதாவி ஆகிய தமிழ் படங்களிலும் கில்லாடி என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து அர்ஜுன் இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அர்ஜுன் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.
ஏற்கனவே பல திரைப்படங்களில் அர்ஜுன் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்த படத்தில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான ஆசிரியையாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது