Categories
சினிமா தமிழ் சினிமா

சமுத்திரகனியின் ‘நான் கடவுள் இல்லை’… தெறிக்கவிடும் மோஷன் போஸ்டர்…!!!

சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ள நான் கடவுள் இல்லை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தலைவி, கமல்ஹாசனின் இந்தியன்-2, ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர், மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா, பிரசாந்தின் அந்தகன், சிவகார்த்திகேயனின் டான், பவன் கல்யாணின் பீம்லா நாயக் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் எழுதி இயக்கியுள்ள நான் கடவுள் இல்லை படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், இனியா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார் . இந்நிலையில் நான் கடவுள் இல்லை படத்தின் அதிரடியான மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |