Categories
உலக செய்திகள்

புர்கா அணிந்து சென்ற ராணுவ வீரர்கள்…. தலிபான்களின் கொடியையும் பயன்படுத்திய சம்பவம்…. பின்னணியிலுள்ள காரணம்….!!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 20 SAS கமாண்டோக்கள் தங்களை மீட்டுச் செல்ல ஹெலிகாப்டர் வசதியில்லை என்பதால் சுமார் பல நூறு மைல்கள் ஆப்கனில் பெண்கள் பயன்படுத்தும் புர்காவை அணிந்து கொண்டு 5 டாக்ஸியின் மூலம் காபூல் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்கள்.

ஆப்கானிஸ்தானின் ராணுவ வீரர்களுடன் இணைந்து செயல்பட்ட இங்கிலாந்து SAS கமாண்டோக்கள் அந்நாட்டிலேயே தங்களுக்கான ஒரு பகுதியையும் அமைத்துள்ளார்கள்.

ஆனால் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் அந்நாட்டின் நிலைமையை அறிந்த இங்கிலாந்து ராணுவ தலைமையகம் அங்குள்ள தங்கள் நாட்டு SAS கமாண்டோக்களை மீட்டு வருவதற்கு முடிவு செய்துள்ளார்கள்.

ஆனால் தங்கள் நாட்டின் படைகளை மீட்பதற்கு ஹெலிகாப்டரை அனுப்ப வாய்ப்பில்லை என்பதால் அவர்களை எப்படியாவது காபூல் விமான நிலையத்திற்கு திரும்புமாறு இங்கிலாந்து ராணுவ தலைமையகம் கேட்டுள்ளார்கள்.

இந்நிலையில் கிட்டத்தட்ட 20 இங்கிலாந்து SAS கமாண்டோக்கள் சுமார் 5 டாக்ஸியின் மூலம் ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் அணிவதற்காக பயன்படுத்தப்படும் புர்காவை அணிந்து கொண்டு பல நூறு மையில்கள் கடந்து காபூல் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்கள்.

மேலும் 20 இங்கிலாந்து SAS கமாண்டோக்கள் செல்ல பயன்படுத்தப்பட்ட டாக்ஸியில் தலிபான்கள்கான கொடியையும் பறக்க விட்டு சென்றுள்ளார்கள்.

Categories

Tech |