உலக புகழ்பெற்ற ஜிப்ஸி இசைக்குழுவின் தலைவர் மறைவுக்கு ஆஸ்திரேலியா அமைச்சர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிங்கள இசைக் கலைஞரும் புகழ்பெற்ற ஜிப்ஸி இசைக்குழுவின் தலைவருமான சுனில் பெரேரா உடல் நலக்குறைவால் கொழும்பில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர் நேற்று எதிர்பாராவிதமாக உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பு செய்தி அறிந்த ஆஸ்திரேலியாவின் சுங்கம், சமூக பாதுகாப்பு மற்றும் பன்முக கலாச்சார விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் Jason Wood தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “ஜிப்ஸி இசைக் குழுவின் புகழ்பெற்ற தலைவரான சுனில் பெரேரா அவரின் 69 வது வயதில் உயிரிழந்துள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக ஆஸ்திரேலியாவிற்கு ஒவ்வொரு முறை அவர் வரும் பொழுது மக்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் அவர் இலங்கைக்கு அளித்த அர்ப்பணிப்பும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் இலங்கை சமுதாயத்துக்கு சுனில் ஏற்படுத்திய தாக்கத்திற்கும் மிக்க நன்றி. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் சுனில் பெரேராவின் முக்கியத்துவத்தையும் நான் நன்கு அறிவேன்” என்று கூறியுள்ளார்.