Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மேய்ச்சலுக்காக சென்ற மாடுகள்… மின்கம்பியால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் விவசாயிகள்…!!

மேய்ச்சலுக்காக சென்ற காளை மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள பாண்டுகுடி அருகே இளையாத்தான் வயல் கிராமம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் மூர்த்தி, ரவி, முருகன், ராமச்சந்திரன் ஆகியோருக்கு சொந்தமான காளை மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்சார வயரில் இருந்து மாடுகளுக்கு மின்சாரம் பாய்ந்துள்ளது.

இந்த விபத்தில் 4 காளை மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்த பின்னர் அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனையறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் மாடுகளை இழந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |