இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் கேப்டன் விராட் கோலி அரைசத வாய்ப்பை தவறவிட்டார் .
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியா முதல் இன்னிங்சில்191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தது. இதனால் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இதில் 2-வது இன்னிங்சில் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் விராட் கோலி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
https://twitter.com/virat_fanboyy/status/1434481522338271235
இதில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த கோலி அவுட்டானதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஓய்வறைக்கு சென்ற கோலி கடும் விரக்தியில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இவரின் இந்த செயல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன் நடந்த முதல் இன்னிங்சில் அரைசதம் கடந்த கேப்டன் கோலி , 2-வது இன்னிங்சிலும் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் ஆட்டமிழந்து வெளியேறியதால் கடும் விரக்தியில் காணப்பட்டார்.