வாலிபரை அரிவாளால் வெட்டிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் வீரபுத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீரபுத்திரன் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மர்ம நபர் வீரபுத்திரனை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வீரபுத்திரனை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.