மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.நடுவப்பட்டி பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிளஸ் – 1 பயின்று வரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்பிறகு மாணவி தனது தாயாரிடம் நடந்தது அனைத்தையும் கூறியுள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று குருசாமியின் மீது புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குருசாமியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.