சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
சின்னத்திரையில் நீண்ட வருடங்களாக நடிகையாக இருப்பவர் கிருத்திகா. இவர் தனது 15 வயதில் இருந்தே சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் இவர் முதன் முதலாக பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் மூலம் அனைவரிடமும் பிரபலமானார். இதனை தொடர்ந்து ஆனந்தம், செல்லமே முந்தானை முடிச்சு போன்ற மெகா ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
https://www.instagram.com/p/COxVgtDBHkx/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் ரேவதி என்ற முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் 86 கிலோவாக இருந்த தனது உடல் எடையை 63 கிலோவாக கிருத்திகா குறைத்துள்ளார். குறிப்பாக 2012 – 2021 வரை தனது உடல் எடை மாற்றம் குறித்த காணொளி ஒன்றை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.