உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து நடத்தப்படாமல் இருந்து வரும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தமிழக தலைமை தேர்தல் ஆணையம் மும்மரமாக செய்து வருகின்றது. இதற்கான அடைந்து நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது . அனைவரின் எதிர்பார்ப்பாக டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருவாடானை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் , முக்குலத்தோர் புலிகள் படை அமைப்பின் தலைவருமான கருணாஸ் கூறுகையில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார். அவர் அதிமுக கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.