தனுஷின் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படாததற்கான காரணம் வெளியாகியுள்ளது.
செல்வராகவன்- தனுஷ் கூட்டணியில் வெளியான புதுப்பேட்டை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். நானே வருவேன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாததற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதாவது நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருவதால் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தேதியை செல்வராகவன் தள்ளிவைத்துள்ளாராம். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.