Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான  வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வசிக்கும் சுடலை ராஜா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசிக்கும் முகமது இன்சார் என்பதும் அவர்கள் இருவரும் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 15 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |