நடிகர் ரகுமான் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக தயாராகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்ய லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட சில பிரபலங்கள் இந்த படத்தில் தங்களுடைய பகுதியின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியானது.
Finally it’s a wrap up for my part from the epic #ponnin selvan the movie. Great experience and learnt a lot from this journey of making this movie with director @ManiRatnamFC , now waiting to watch it on the big screen ! pic.twitter.com/0lR7IcQNws
— Rahman (@actorrahman) September 4, 2021
இந்நிலையில் நடிகர் ரகுமான் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘பொன்னியின் செல்வன் படத்தில் என்னுடைய பகுதியின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. இந்த பயணத்திலிருந்து சிறந்த அனுபவம் மற்றும் நிறைய கற்றுக் கொண்டேன். இந்த படத்தை பெரிய திரையில் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். மேலும் அவர் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.