அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவையில் 2021-2022 ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. அதில், தமிழகத்தின் இந்த வருடத்திற்குள் ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும். அர்ச்சகர் ஒருவருக்கு பயிற்சி காலத்தில் வழங்கப்படும் ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.