நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை ஒருவர் கழிவறையை சுத்தம் செய்யும் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது பரவலாக குறைந்துள்ள காரணத்தினால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஒன்றில் தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு வராத காரணத்தினால் கழிவறையை தலைமையாசிரியை சுத்தம் செய்யும் காட்சிகள் வெளியானது. அது நாகை மாவட்டம் பாலையூர் அடுத்த அழிஞ்சமங்கலத்தில் உள்ள பழமையான ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி ஆகும். அந்த பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வரும் வீரப்பன் என்பவர் அங்குள்ள கழிவறையை தினமும் சுத்தம் செய்து வருகிறார். இந்த சம்பவம் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது.