Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS ENG 4-வது டெஸ்ட் :2-ம் நாள் ஆட்ட முடிவில் …. இந்திய அணி 43 ரன்கள் குவிப்பு ….!!!

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் முதல்  இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி  அனைத்து விக்கெட் இழப்புக்கு  290 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்  செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு  191 ரன்களில் சுருண்டது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 50 ரன்னும், ஷர்துல் தாகூர் 57 ரன்கள் குவித்தனர் .இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 4 விக்கெட்டும், ராபின்சன்  3 விக்கெட்டும்  கைப்பற்றினர். இதன் பிறகு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு  53 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் ஒல்லி போப் பொறுப்புடன் விளையாடி 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் .இறுதியில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் வோக்ஸ் அரை சதம் கடந்தார். இறுதியாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா தரப்பில் பும்ரா , ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் ,உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும் ,ஷர்துல் தாகூர் மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதனால் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது .தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித்- ராகுல் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியாக 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் குவித்துள்ளது.

Categories

Tech |