Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கல்குவாரியில் பதுங்கி இருக்கு…. பசுங்கன்றை கொன்று தின்றது…. விவசாயிகளின் கோரிக்கை….!!

ஒருவருடமாக ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை கன்றுக்குட்டியை கொன்று தின்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம், மல்குத்திபுரம் போன்ற கிராமத்தில் பெரும்பாலான விவசாயிகள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை இப்பகுதியில் உள்ள கல்குவாரியில் பதுங்கி இருந்து கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு சிறுத்தையின் அட்டூழியம் தொடர்ந்து நடைபெறுவதால் அதனை கூண்டு வைத்துப் பிடிப்பதற்கு வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி பல்வேறு இடங்களில் கூண்டு வைத்தும் சிறுத்தை சிக்காமல் ஆடு, மாடு, கன்று குட்டிகளை வேட்டையாடுவதும், பின் கல்குவாரியில் பதுங்கி கொள்வதுமாக இருக்கிறது.

இதனையடுத்து தொட்டகாஜனூர் பகுதியில் விவசாயி ரங்கசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாடு, கன்றுகளை வளர்த்து வருகின்றார். இவருடைய வீடு மற்றும் மாட்டு கொட்டகை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கின்றது. இந்நிலையில் ரங்கசாமி வழக்கம்போல் மாடுகளை மேய்ச்சலுக்கு பின் கொட்டகையில் அடைத்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டார். அதன்பின் மாட்டுக் கொட்டகைக்கு ரங்கசாமி வந்து பார்த்தபோது ஒரு பசுங்கன்று வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ரங்கசாமி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அந்த தகவலின்படி வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவாகி இருந்த தடயங்களை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பசுங்கன்றை வேட்டையாடியது சிறுத்தை என்று வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆகவே கல்குவாரியில் பதுங்கியிருக்கும் சிறுத்தைகள் தான் ரங்கசாமி வளர்த்து வந்த பசுங்கன்றை கொன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கடந்த ஒரு வருடமாக அட்டூழியம் செய்து வரும் சிறுத்தையை வனத்துறையினர் பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |