பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ரூ 6 கோடி பரிசும், சிங்க்ராஜ் அதானாவுக்கு ரூ 4 கோடி பரிசும் வழங்கப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது..
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த 54 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.. பலரும் பதக்கங்களை வென்று வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இன்று டோக்கியோ பாராலிம்பிக் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் தங்கப்பதக்கமும், சிங்க்ராஜ் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். இதனால் இந்தியா பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 34 ஆவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ரூ 6 கோடி பரிசும், வெள்ளி வென்ற சிங்க்ராஜ் அதானாவுக்கு ரூ 4 கோடி பரிசும் வழங்கப்படுவதாக அரியானா அரசு அறிவித்துள்ளது.. மேலும் பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது..