Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தில் ஹீரோயின் இவர்தானா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். ‘நானே வருவேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார் .

Indhuja Ravichandran Age, height, Weight, Size, DOB, Boyfriends, Family, Biography - News Resolution

மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் நானே வருவேன் படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை இந்துஜா பிகில், மகாமுனி, மேயாத மான் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |