இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 191 ரன்களில் சுருண்டது .
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 191 ரன்களில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 57 ரன்களும் கேப்டன் விராட் கோலி 50 ரன்களும் எடுத்தனர் .இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 4 விக்கெட்டும் , ராபின்சன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர் .இதன்பிறகுடேவிட் மலான் , கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் கேப்டன் ஜோ ரூட் 21 ரன்கள் எடுத்திருந்தபோது உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் குவித்துள்ளது .இந்தியா தரப்பில் 2 பும்ரா விக்கெட்டும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.