தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதற்கிடையில் பள்ளிகள் திறக்காமல் ஆன்லைன் வழியாக பாடம் நடத்தப்பட்டதால் முழுமையான கட்டணத்தை வசூலிக்கக்கூடாது 75% கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் முழு தொகையையும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு வருடம் தோறும் தனியார் பள்ளி கட்டணத்தை தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்து அறிவிக்கும். தனியார் பள்ளி கட்டண நிர்ணயம் தொடர்பாக சுயநிதி பள்ளிகள் கட்டண கமிட்டி செயல்படுகிறது. இதனையடுத்து கொரோனா காரணமாக கல்விக்கட்டணம் குறித்த விவரங்களை அனுப்ப முடியாமல் போனது என்று தனியார் பள்ளிகள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதால் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் கொடுத்து கல்வி கட்டண கமிட்டி தனி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.