Categories
தேசிய செய்திகள்

“ஒரே ஒரு போர்டு” உள்ளூர் முதல் வெளிநாடு வரை…. பிரபலமான வரன் தேடும் மாப்பிள்ளை…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் மேட்ரிமோனி வழியாகவே வரன் பார்க்கப்பட்டு திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் விளம்பர பலகை ஒன்றின் மூலம் உள்ளூர் முதல் வெளிநாடு வரை வரன் தொடர்பான அழைப்புகளை நபர் ஒருவர் பெறுகிறார். கேரளாவைச் சேர்ந்த தேனீர் கடை நடத்தி வரும் உன்னிகிருஷ்ணன் என்பவர் திருமணத்திற்கு நீண்ட நாட்களாக வரன் தேடி வந்துள்ளார். ஆனால் பல காலங்களாக அவருக்கு சரியான வரன் அமையவில்லை என்பதனால் ஒரு முடிவெடுத்த அவர், “எனக்கு வரன் தேவை. சாதி, மதம், பேதம் கிடையாது” என்று ஒரு பலகையில் எழுதி தன் எழுதி தன்னுடைய டீக்கடையில் தொங்க விட்டிருக்கிறார்.

இதைக் கவனித்த அவருடைய நண்பர் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது இணையத்தில் வைரலாக பரவியதையடுத்து, இதன் மூலம் தொலைதூர நாடுகளில் வாழும் மலையாளிகளிடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன . மேலும் அவரை வாழ்த்துவதற்காகவும் நிறைய பேரிடம் இருந்து அழைப்புகள் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  அழைப்புகள் வருவதால் பல அழைப்புகளுக்கு அவரால் பதிலளிக்க நேரம் கிடைக்கவில்லை என்றும், விரைவில் தான் திருமணம் செய்யும் நல்ல செய்தி வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |