Categories
தேசிய செய்திகள்

VPN சேவை தடை…? இனி ஆபாச படம் பார்க்க முடியாது…. அரசு அதிரடி…!!!

இந்தியாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துவதால் இணைய பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இது நவீனமயமான போக்கு என்றாலும் கூட ஆன்லைன் மூலம் மோசடிக் கும்பல்கள் மக்களை ஏமாற்றும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். நேரடியாக மக்களிடம் இருந்து ஏமாற்றி பணத்தை பறிப்பதை காட்டிலும் இதுபோன்று மறைமுகமாக பணத்தை பறிப்பது அவர்களுக்கு மிக எளிதாக இருக்கிறது. பணமோசடி மட்டுமல்லாமல் பெண் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள்.

மேலும் தடை செய்யப்பட்ட ஆபாச இணையதளங்களில் நுழைந்து ஆபாச வீடியோக்களையும் பார்த்து, தரவிரக்கம் செய்து ஷேர் செய்தும் விடுகிறார்கள். இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. குற்றவாளிகள் என்ன தேடுகிறார்கள்? அவர்கள் செல்லும் வெப்சைட்டுகள் என்ன? என அனைத்தையும் இந்த விபிஎன் மறைத்து விடுகின்றது. விபிஎன் ஆக்டிவேட் செய்து விட்டால் ஐபி முகவரி மாறிவிடும். இதனால் அவர்கள் எங்கிருந்தாலும் வெளிநாடுகளில் இருப்பது போன்று காட்டும். எனவே குற்றவாளிகளை டிராக் செய்வது மிகவும் கடினமானதாக இருக்கும்.

இந்த நிலையில் இந்தியாவில் விபிஎன் சேவைகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஆன்லைன் குற்றவாளிகள் தங்கள் அடையாளம் தெரியாமல் மறைந்த விபிஎன் சேவை அனுமதிக்கிறது.இது தடை செய்யப்பட்டால்   பப்ஜி போன்ற கேம்கள், ஆபாச படங்கள் ஆகியவற்றை பார்ப்பதும் தடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

Categories

Tech |