Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற கார்…. பெற்றோர் கண்முன்னே நடந்த விபரீதம்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

பெற்றோரின் கண்முன்னே கார் மோதி சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மனோஜ் என்ற மகன் இருந்துள்ளார். இதில் சுப்புலட்சுமி தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை முடிந்து வரும் சுப்புலட்சுமியை அழைப்பதற்காக ரங்கசாமி தனது மகனுடன் மில்லுக்கு வெளியே காத்திருந்தார். இதனையடுத்து சுப்புலட்சுமியை பார்த்ததும் சந்தோசத்தில் மனோஜ் சாலையின் குறுக்காக ஓடிவிட்டான்.

இதனால் அவ்வழியாக வேகமாக சென்ற கார் சிறுவனின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மனோஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார் டிரைவரான செந்தில்குமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |