Categories
மாநில செய்திகள்

ஏழை எளிய மக்களுக்கு…. உணவு வழங்க புதிய திட்டம்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், விழாக்காலங்களில் வீணாகும் உணவு ஏழை எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்க புதிய திட்டம் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். அதன்படி, நட்சத்திர விடுதிகள், விழாக்காலங்களில் உணவை வீணாக்காமல் அதை ஏழை எளியவர்களுக்கு கொண்டு சேர்க்க முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிறுவப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |