ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மதுரை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விழா ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மிகச் சிறப்பாக நடைபெறும்.. இந்த விழா உலக அளவில் புகழ்பெற்றதாகும்.. தற்போது அடுத்த ஆண்டுக்கு மாடுகள் அனைத்தும் தயாராகி வருகின்றது..
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளி நாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது எனவும், நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.