இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரஷித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது .இதில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது .
இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளரான பிரஷித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளார். இதனை பிசிசிஐ தெரிவித்துள்ளது.
UPDATE – Prasidh Krishna added to India’s squad
More details here – https://t.co/Bun5KzLw9G #ENGvIND pic.twitter.com/IO4JWtmwnF
— BCCI (@BCCI) September 1, 2021